
காஞ்சி மடத்தின் பீடாதிபதியாகும்போது, மகா பெரியவாளுக்கு வயது 13. கும்பகோணம் மடத்தில் அவரைப் பார்க்க வருவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தது. இதனால், வேத பாடங்களைக் கற்பதற்கு அவரால் நேரம் ஒதுக்கவே முடியவில்லை. என்ன செய்வது என மடத்து அதிகாரிகள் யோசித்தனர். முசிறி- தொட்டியம் சாலையில், காவிரியின் வடகரையில் உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் அவரைத் தங்கவைக்கலாம் என முடிவு செய்தனர்.
10-ஆம் நூற்றாண்டில், இந்தக் கிராமம் செழிப்பாக இருந்துள்ளது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், இந்தக் கிராமத்தை அந்தணருக்குத் தானம் அளித்துள்ளதைத் தெரிவிக்கிற கல்வெட்டுகள் உள்ளன. இங்கேயுள்ள சிவாலயம், எத்தனை பிரமாண்டம் என்பது, நிலத்தை அகழ்ந்தபோதுதான் தெரிந்ததாம்! இந்தக் கடவுளின் திருநாமம் தில்லைநாதன்; கடவுளுக்குப் பரிசாக இந்த ஆலயம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊருக்கு அருகில் ஸ்ரீநிவாசநல்லூர் எனும் கிராமம் உள்ளது. இங்கும் ஆலயம் உண்டு. இரண்டு ஊர்களின் ஆலயங்களும், சோழர் காலத்திய கட்டமைப்புடன் திகழ்கின்றன. ஒருகாலத்தில், மகேந்திரமங்கலம் கிராமம் போர்க்களமாகவும் இருந்துள்ளதாம்! ‘கோயில் பற்றிய குறிப்புகள், தமிழில் வசன நடையில் இல்லாமல், கவிதை நடையில் இருப்பது சுவாரஸ்ய மாக உள்ளது’ என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் இரா.நாகசாமி.


இந்த நிலப் பகுதியை, சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒருவர் வாங்கி, செங்கல் சூளை போடுவதற்காகத் தோண்டினார். அப்போதுதான் புதையுண்ட நிலையில் இருந்த ஆலயமும், அதன் பிரமாண்டமும் தெரிந்ததாம். நந்தியின் திருமுகம் மட்டும் சற்றே சிதிலமாகியிருந்தது. அந்தக் களத்து மேட்டிலேயே சிவலிங்கத்தையும் நந்தியையும் வைத்திருந்தனர். 60-களில் இங்கு வந்த மகா பெரியவா, ‘பகவான் இப்படி வெயிலிலும் மழையிலும் இருக்காரே’ என வருந்தினாராம். பழையபடி பெரிய கோயிலாக இல்லாது போனாலும், சின்னதாக ஒரு கோயில் கட்டலாமே என விரும்பினாராம். பிறகு, 2006-ஆம் வருடம், ஸ்ரீஜெயேந்திரர் இங்கு வந்தபோது, பெருமாள் கோயிலுக்கு அருகில் கூரை போட்டு, கோயிலாக அமைத்தாராம்.

இங்கு வரும்போதெல்லாம், அருகில் உள்ள ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோயி லுக்கும் செல்வாராம் பெரியவா. ஆயிரம் படிகளை மளமளவென்று அவர் ஏறிக் கடப்பதைப் பார்ப்பதே அத்தனை அழகு! இந்த ஊருக்கு ஸ்ரீஆதிசங்கரர் விஜயம் செய்திருக்கிறார். இதை அறிந்த மகா பெரியவா, சந்தியா வந்தனப் படித்துறைக்குச் செல்லும் வழியில் உள்ள மடத்தில், ஸ்ரீஆதி சங்கரருக்கு திருவிக்கிரகம் ஸ்தாபித்துள்ளார். இப்போது அவருக்கு அருகிலேயே மகா பெரியவாளுக்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்துள்ளார், ஸ்ரீஜெயேந்திரர். ”இங்கே அனுதினமும் ஆதிசங்கரர், மகா பெரியவா இரண்டு பேருக்கும் பூஜைகள் நடந்துண்டிருக்கு” என்கிறார் ராமமூர்த்தி குருக்கள். ”ஸ்வாமி ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்- ஸ்ரீதிரிபுரசுந்தரிக்கு இங்கு கோயில் எழுப்பிவிட்டால், மகா பெரியவாளின் விக்கிரகத்தை அந்தக் கோயிலில் வைத்து வழிபடலாம்” என்கிறார் தேசியவாதி யான காந்திப்பித்தன். காஞ்சி மகானுடன் பழகியவராம் இவர்.


மகா பெரியவாளின் விக்கிரகத் திருமேனியை வடித்த சுவாமிநாத ஸ்தபதிதான், கோயில் பணியை ஏற்றிருக்கிறார். ”பெரியவாளோட விக்கிரகத்தின் கண்களைத் திறக்கும் நேரத்துல உடம்பே சிலிர்த்துப் போச்சு! அவரோட விருப்பமான, இந்தக் கோயில் கட்டுற பணி கிடைச்சிருக்கிறது, எனக்குக் கிடைச்ச பாக்கியம்!” என்று சொல்லிச் சிலிர்க்கிறார் ஸ்தபதி. மூலவர், அம்பாள், பஞ்சபரிவாரம், ஸ்ரீகணபதி, ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீசண்டிகேஸ்வரர் முதலான அனைத்து தெய்வ மூர்த்தங்களும் அமைக்கப்பட உள்ளதாம்!
”மகா பெரியவா படிச்ச வேதபாடசாலையைப் பார்க்கறதே புண்ணியம். அவரோட விருப்பப்படி கோயில் அமையறது, இந்த ஊருக்குக் கிடைச்ச வரம்” என்கிறார் மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த ஜெயராமன். மகாபெரியவா இங்கு படித்தபோது, அவருடன் நெருங்கிப் பழகியவராம் இவரின் தாத்தா.
மகேந்திரமங்கலம், இனி மங்கலகரமான தலமாகத் திகழும் என்பது உறுதி!!!
காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து பக்தர் ஒருவர் காஞ்சிப்பெரியவரை தரிசிக்க மடத்திற்கு வந்திருந்தார். அந்த ஊரில் சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோ கிடையாது. ஒரே ஒரு பிள்ளையார் கோயில் மட்டும் தான். வந்திருந்த பக்தர் தன்னுடைய ஊரைச் சொன்னதும், பெரியவர் அவரிடம், “”உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலை, ராமபிள்ளையார் கோயில் என்று தானே கூறுவார்கள்,” என்றார். அவரும்,””ஆமாம் சுவாமி!” என்று சொல்லி தலையசைத்தார்.
சிறிது நேர யோசனைக்குப் பின் பெரியவர் மீண்டும் பக்தரை அழைத்து, “”உங்க கிராமத்தில் அந்த காலத்தில் துக்கிரிப்பாட்டி என்றொருத்தி இருந்தாள் தெரியுமா?” என்று கேட்டார். பக்தரும் பயபக்தியுடன்,””நான் கேள்விபட்டிருக்கிறேன்!” என்றார்.
“”உங்கள் ஊர் துக்கிரிப்பாட்டி பற்றி நானே உனக்குச் சொல்கிறேன்” என்று தொடர்ந்தார்.
“”அந்த காலத்தில் உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் தான் ராமநாமஜெபம் நடக்கும். அதனால் அக்கோயிலுக்கு “”ராம பிள்ளையார் கோயில் ” என்ற பெயர் வந்தது” என்றார். பெரியவர் பேச்சை பக்தர் மெய்மறந்து கேட்கத் தொடங்கினார். பெரியவர், ””அதுசரி! ராமபிள்ளையார் இருக்கட்டும்.
துக்கிரிப்பாட்டி கதைக்கு வருகிறேன்!” என்று தொடர்ந்தார்.
“” துக்கிரிப்பாட்டியின் இளவயதிலேயே கணவர் இறந்து விட்டார். அதனால், அவளை உலகம் பழித்துப்பேசியது. அவளைக் கண்டால் ஆகாது என்று எண்ணி “”அடி! துக்கிரி! துக்கிரி!” என்று திட்டித்தீர்த்தது. விதியின் கொடுமையை எண்ணிய அவள் தன் மனநிம்மதிக்காக ராமநாமாவைச் சொல்லத் தொடங்கினாள். அதுவே ஜபவேள்வியானது. ஆண்டுகள் உருண்டோடின. அவளும் பாட்டியாகிவிட்டாள். ஒரு சந்தர்ப்பத்தில், ஊர் பிரமுகரின் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனது. வயிற்றுவலியால் குழந்தை துடித்தது. வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை. விஷயத்தை அறிந்த துக்கிரிப்பாட்டி தானாகவே பிரமுகரின் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். ராமநாமத்தை ஜெபித்து, குழந்தையின் நெற்றியில் விபூதியிட்டு, “”பூரண குணம் உண்டாகும்” என்று சொல்லிச் சென்றாள். என்ன ஆச்சர்யம்! அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை “”துக்கிரிப்பாட்டி” என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர். “”ராமநாம பாட்டி” என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள். நீயும் அந்த பாட்டிபோல சதாசர்வ காலமும் ராமநாமத்தை ஜெபித்துவா. எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும்,” என்று ஆசியளித்து அனுப்பினார்.
துக்கிரிப்பாட்டி கதைக்கு வருகிறேன்!” என்று தொடர்ந்தார்.
“” துக்கிரிப்பாட்டியின் இளவயதிலேயே கணவர் இறந்து விட்டார். அதனால், அவளை உலகம் பழித்துப்பேசியது. அவளைக் கண்டால் ஆகாது என்று எண்ணி “”அடி! துக்கிரி! துக்கிரி!” என்று திட்டித்தீர்த்தது. விதியின் கொடுமையை எண்ணிய அவள் தன் மனநிம்மதிக்காக ராமநாமாவைச் சொல்லத் தொடங்கினாள். அதுவே ஜபவேள்வியானது. ஆண்டுகள் உருண்டோடின. அவளும் பாட்டியாகிவிட்டாள். ஒரு சந்தர்ப்பத்தில், ஊர் பிரமுகரின் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனது. வயிற்றுவலியால் குழந்தை துடித்தது. வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை. விஷயத்தை அறிந்த துக்கிரிப்பாட்டி தானாகவே பிரமுகரின் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். ராமநாமத்தை ஜெபித்து, குழந்தையின் நெற்றியில் விபூதியிட்டு, “”பூரண குணம் உண்டாகும்” என்று சொல்லிச் சென்றாள். என்ன ஆச்சர்யம்! அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை “”துக்கிரிப்பாட்டி” என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர். “”ராமநாம பாட்டி” என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள். நீயும் அந்த பாட்டிபோல சதாசர்வ காலமும் ராமநாமத்தை ஜெபித்துவா. எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும்,” என்று ஆசியளித்து அனுப்பினார்.
பெரியவரின் பேச்சைக் கேட்ட அனைவரும் ராமநாமத்தின் மகத்துவத்தை உணர்ந்தனர்.
காஞ்சிசங்கரமடத்திற்கு சிதம்பரத்திலிருந்து தீட்சிதர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் பெரியவரிடம் சிதம்பரம் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழைச் சமர்ப்பித்து வணங்கினர்.
அழைப்பிதழில் ஒரு வரி விடாமல் அனைத்துப் பக்கங்களையும் படித்து முடித்த பெரியவர் அதில் இடம்பெற்றிருந்த “சர்ம கஷாயம்’ என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று கேட்க, யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. “”அர்த்தம் தெரிந்தவர்கள் சர்ம கஷாயத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்” என்று மீண்டும் கேட்டார் பெரியவர்.
புலவர் வெங்கடேசன் என்ற பக்தர்,”"சர்ம கஷாயம்” என்பது சமஸ்கிருதச் சொல் என்று மட்டும் தெரிகிறது. ஆனால், எனக்கு அதன் பொருள் தெரியவில்லை” என்று சொல்லி முடித்தார். உடனே பெரியவரே சர்மகஷாயத்திற்கு விளக்கம் தர முன் வந்தார்.
“சர்ம கஷாயம்’ என்பது சமஸ்கிருதச் சொல் தான். ஆலமரம், அரசமரம், அத்திமரம், பலாமரம் போன்ற பால் துளிர்க்கும் மரங்களில் இருந்து மரப்பட்டைகளை சேகரித்து இடித்து தண்ணீரில் போட்டு ஒரு மண்டலம் (41நாட்கள்) நன்றாக ஊற வைப்பார்கள். அந்த கஷாயத்தை கலசங்களில் நிரப்புவார்கள். பூஜையில் வைத்து வேதமந்திரங்களை ஜெபித்து விக்ரகங்களுக்கும், கலசங்களுக்கும் அபிஷேகம் செய்வார்கள்,” என்று அருமையான விளக்கம் அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதர்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
“சர்ம கஷாயம்’ என்பது சமஸ்கிருதச் சொல் தான். ஆலமரம், அரசமரம், அத்திமரம், பலாமரம் போன்ற பால் துளிர்க்கும் மரங்களில் இருந்து மரப்பட்டைகளை சேகரித்து இடித்து தண்ணீரில் போட்டு ஒரு மண்டலம் (41நாட்கள்) நன்றாக ஊற வைப்பார்கள். அந்த கஷாயத்தை கலசங்களில் நிரப்புவார்கள். பூஜையில் வைத்து வேதமந்திரங்களை ஜெபித்து விக்ரகங்களுக்கும், கலசங்களுக்கும் அபிஷேகம் செய்வார்கள்,” என்று அருமையான விளக்கம் அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதர்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல, வேறொரு சந்தர்ப்பத்திலும் பெரியவருடைய சொல் ஆராய்ச்சி வெளிப்பட்டது.
ஒரு சந்தர்ப்பத்தில் பெரியவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் தனிப்பாடல் புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பாடலில்,
ஒரு சந்தர்ப்பத்தில் பெரியவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் தனிப்பாடல் புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பாடலில்,
“”பக்குவமாக கவிநூறு செய்து பரிசுபெற
முக்காண மெதிர் பல்காலும்போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடி அலுத்து வந்த
குக்கலை ஆண்டயருள் வில்வவனத்து குயிலம்மையே!”
முக்காண மெதிர் பல்காலும்போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடி அலுத்து வந்த
குக்கலை ஆண்டயருள் வில்வவனத்து குயிலம்மையே!”
இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள “வில்வவனம்’ என்ற ஊர் எங்கே உள்ளதென்று ஆராயத் தொடங்கினார்
பெரியவர். வில்வவனம் என்று சிவத்தலங்கள் பல உண்டு. இருந்தாலும், இதில் வரும் வில்வவனம்
எங்கிருக்கிறது என்பதை அறிய ஆவல் கொண்டார். புதுச்சேரி பகுதியிலுள்ள சிவத்தலமாக இருக்கவேண்டும் என்பது பெரியவரின் எண்ணமாக இருந்தது.
பெரியவர். வில்வவனம் என்று சிவத்தலங்கள் பல உண்டு. இருந்தாலும், இதில் வரும் வில்வவனம்
எங்கிருக்கிறது என்பதை அறிய ஆவல் கொண்டார். புதுச்சேரி பகுதியிலுள்ள சிவத்தலமாக இருக்கவேண்டும் என்பது பெரியவரின் எண்ணமாக இருந்தது.
பாரிசிலிருந்து ஆராய்ச்சியாளர் மூலியன் வேன்ஸான் அனுப்பிய கையெழுத்துப்பிரதியான வில்வவன புராணத்திலும் இந்த வில்வவனம் பற்றி எழுதியிருந்ததையும் அவர் பார்த்தார். தற்போது புதுச்சேரியில் இருக்கும் வில்லியனூரே, இப்பாடலில் குறிப்பிடும் வில்வவனம் என்று உறுதிப்படுத்தினார் பெரியவர்.
சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள். மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம். ஒருமுறை, நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சிமடத்தில் பாடுவதாக அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தார்கள். அதே நாளில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலிலும் நவராத்திரி நிகழ்ச்சியில் சகோதரர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால், காஞ்சி மடத்தில் பாடவேண்டியிருப்பதை குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், நவராத்திரி விழா துவங்குவதற்கு இருபது நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது. அதில் நவராத்திரி கலைவிழாவில் முதல்நாள் பாடவேண்டிய பாலக்காடு கே.வி. நாராயண சுவாமிக்கு வரமுடியவில்லை. அவர் மூன்றாம் நாள் பாட வருவதாக ஒத்துக்கொண்டார். அதனால் முதல்நாள் நிகழ்ச்சியில் அவசியம் பாடும்படி கேட்டுக்கொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ்சில் திருவனந்தபுரம் கிளம்பினர். முதல்நாள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மூன்றாம் நாள் காஞ்சிபுரம் புறப்பட்டனர். அப்போது கனமழை பிடித்துக்கொண்டது. காஞ்சிபுரம் செல்லமுடியுமோ முடியாதோ என்ற வருத்தம் உண்டானது. பெரியவரை வேண்டிக் கொண்டு மழையோடு மழையாக பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தனர். சென்னைக்குக் கிளம்பும் விரைவு பஸ் கிளம்பிக்கொண்டிருந்த சமயம். இவர்கள் பஸ்சில் இடம் இருக்கிறதா என பார்த்தனர். சொல்லி வைத்தது போல் இரண்டு இருக்கைகள் மட்டும் காலியாக இருந்தன. மூன்றாம் நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தனர். காலை பத்து மணிக்கு பூஜை ஆரம்பம். பூஜையில் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார்கள். பிரசாதம் வழங்கும் நேரம்… சங்கீத சகோதரர்கள் பெரியவர் முன் நின்றார்கள். பெரியவர் அவர்களிடம், “”என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?” திருவனந்தபுரம் சென்று வந்த விஷயம் பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று சகோதரர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். சாஷ்டாங்கமாக அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, “”பெரியவா அனுகிரஹத்தாலே திருவனந்தபுரத்திலேயும், காஞ்சியிலேயும் பாடும் வாய்ப்பு கிடைச்சுது!” என்று பணிவுடன் சொன்னார்கள். “”அப்படி ஒன்றும் இல்லை! அம்பிகை தான் ஒரே கல்லடிச்சு உங்களுக்கு இரண்டு மாம்பழம் கொடுத்துட்டான்னு சொல்லு!” என்று வாழ்த்தினார். பெரியவரின் வாழ்த்தைக் கேட்டு சகோதரர்கள் இருவரும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர் அருகிலுள்ள நல்லிச்சேரி கிராமத்தில், வேதபண்டிதர் சாம்பசிவ ஸ்ரௌதிகள் என்பவர் வசித்தார். அவர் சந்நியாசம் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார். அவருக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை மட்டும் தான். அவரும் வேதபண்டிதர். ஆனால், அவருக்கு இருதய நோய் என்பதால், வேதபாராயணத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. வருமானம் இல்லாமல் குடும்பம் மிகவும் சிரமப்பட்டது. அம்மாவும், பிள்ளையும் அன்றாடத் தேவைக்கே அல்லல்பட்டனர்.
தஞ்சாவூரில் இருந்த சந்தானராமன் என்பவர், காஞ்சிப்பெரியவரின் பக்தராக இருந்தார். அவரிடம் சாம்பசிவ ஸ்ரௌதிகளின் மனைவியும், பிள்ளையும் சென்றனர். காஞ்சிமடத்திற்குச் செல்வதற்கு பணம் வாங்கிக்கொண்டு பெரியவரைத் தரிசிக்க கிளம்பினார்கள். தங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி எப்படியும் உதவி பெறவேண்டும் என்பது அவர்களின் நோக்கம். சந்தானராமனும் அவர்களது பயணச் செலவிற்கு பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். பெரியவருக்கு ஏற்கனவே சாம்பசிவ ஸ்ரௌதிகளின் மனைவியையும், பிள்ளையையும் நன்றாகத் தெரியும். அவர்களிடம் நலம் விசாரித்த பெரியவர் மடத்திலேயே சிலநாட்கள் தங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்.
தஞ்சாவூரில் இருந்த சந்தானராமன் என்பவர், காஞ்சிப்பெரியவரின் பக்தராக இருந்தார். அவரிடம் சாம்பசிவ ஸ்ரௌதிகளின் மனைவியும், பிள்ளையும் சென்றனர். காஞ்சிமடத்திற்குச் செல்வதற்கு பணம் வாங்கிக்கொண்டு பெரியவரைத் தரிசிக்க கிளம்பினார்கள். தங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி எப்படியும் உதவி பெறவேண்டும் என்பது அவர்களின் நோக்கம். சந்தானராமனும் அவர்களது பயணச் செலவிற்கு பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். பெரியவருக்கு ஏற்கனவே சாம்பசிவ ஸ்ரௌதிகளின் மனைவியையும், பிள்ளையையும் நன்றாகத் தெரியும். அவர்களிடம் நலம் விசாரித்த பெரியவர் மடத்திலேயே சிலநாட்கள் தங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்.
ஏதாவது உதவி செய்யத்தான், பெரியவர் இங்கு தங்கும்படி சொல்கிறார் என்று எண்ணி நம்பிக்கையோடு அவர்கள் இருந்தனர். சிலநாட்கள் கழித்து சிரௌதிகளின் பிள்ளையிடம்,”"நீயும் உன் தாயாரும் நல்லிச்சேரிக்கு கிளம்புங்கள். உங்கள் தேவைகளை மடம் கவனித்துக் கொள்ளும்,” என்று கூறி வழிச்செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். சிரௌதிகளின் பிள்ளைக்கு அவநம்பிக்கை உண்டானது. தஞ்சாவூர் சந்தானராமனைச் சந்தித்து, “”மகாசுவாமிகள் என் நிலையை நன்குதெரிஞ்சும் “கைவிரிச்சுட்டா! என்னையும் என் தாயாரையும் நல்லிச்சேரிக்கு திரும்பிச் செல்லும்படி அனுப்பிச் சுட்டா! இனிமேல் நான் என்ன செய்வேன். நானும் அம்மாவும் இரண்டுநாட்கள் தஞ்சாவூரில் தங்கிவிட்டு நல்லிச்சேரிக்கு கிளம்புறோம்,” என்று சொல்லி வேதனைப்பட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் தஞ்சாவூர் மிராசுதார் ஒருவர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவருக்கு ஆசியளித்து பரிபூரண அனுகிரகம் செய்தார் பெரியவர். அவரிடம் காஞ்சிப்பெரியவர், “”எனக்கு ஒரு உதவி செய்வியா?” என்று கேட்டார். “”சாமி! உங்க உத்தரவுப்படியே நடக்கிறேன். என்னவென்று சொல்லுங்கள்,” என்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் தஞ்சாவூர் மிராசுதார் ஒருவர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவருக்கு ஆசியளித்து பரிபூரண அனுகிரகம் செய்தார் பெரியவர். அவரிடம் காஞ்சிப்பெரியவர், “”எனக்கு ஒரு உதவி செய்வியா?” என்று கேட்டார். “”சாமி! உங்க உத்தரவுப்படியே நடக்கிறேன். என்னவென்று சொல்லுங்கள்,” என்றார்.
“”நல்லிச்சேரி கிராமத்தில் சாம்பசிவ ஸ்ரௌதிகள் குடும்பம் உள்ளது. அவ்வீட்டில் அவரது பிள்ளையும், மனைவியும் வறுமையில் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு வருஷத்திற்கு தேவையான அரிசி,பருப்பு, பலசரக்குகளை ஒரு வண்டியில் அனுப்பிவை. இதை உடனே செய்தால் எனக்கு சந்தோஷம்” என்று மிராசுதாரிடம் கேட்டுக்கொண்டார். மிராசுதாரும் பெரியவர் விருப்பத்தை உடனே நிறைவேற்றும் வகையில் ஒரு வண்டிநிறைய அரிசி, பருப்பு, உப்பு,புளி, மிளகாய் என்று அத்தனையும் வந்து சிரௌதிகளின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால், சிரௌதிகளின் வீடோ பூட்டியிருந்தது. வீட்டின் முன்னர் பொருட்களை குவித்துவிட்டு வேதபண்டிதரின் மனைவிக்கு தகவல் தந்தனர்.
அம்மாவும், பிள்ளையுமாக சந்தானராமன் வீட்டில் இருந்து நல்லிச்சேரிக்கு கிளம்பி வந்தனர். அப்போது சந்தானராமனிடம், “”பெரியவாளின் நல்ல மனசை புரிஞ்சுக்காமல் இப்படித் தவறா நினைத்துவிட்டேனே!” என்று மிகவும் வருந்தினர். பெரியவரின் பக்தரான சந்தானராமனும் விபரத்தை அறிந்து கண்ணீர் வடித்தார்.
சுந்தா சுந்தரம் என்ற பெண்மணியின் குடும்பம் காஞ்சிப்பெரியவர் மீது அளவு கடந்த பக்தி மிக்கது. சுந்தா சுந்தரம் எப்போது வந்தாலும் ஒரு ரோஜா மலர்க் கூடையை கையில் கொண்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தக் குடும்பத்தோடு மூதாட்டி ஒருவர், பெரியவரைத் தரிசனம் செய்வதற்காக சங்கரமடத்திற்கு வந்திருந்தார். அவரது கையில் ஒரு சிறிய சீதாப்பழம் இருந்தது. பெரியவருக்கு கொடுக்க எண்ணி கையில் வைத்திருந்தார். மூதாட்டியைக் கண்ட மடத்து சிஷ்யர் ஒருவர், “”பாட்டியம்மா! பெரியவா இந்த மாதிரி பழங்களை எல்லாம் ஒருக்காலும் ஏத்துக்க மாட்டா! வெறுமனே நமஸ்காரம் செய்துட்டுப் போங்கோ!” என்று சொல்ல, மிகுந்த வருத்தத்துடன் அவர் தன்னுடைய முந்தானையில் அப்பழத்தை மறைத்துக் கொண்டார். நீண்ட வரிசையில் நின்றிருந்த மூதாட்டி பெரியவரின் அருகே வந்து சேர்ந்தார். பெரியவரை நமஸ்கரித்தார். அதுநேரம் வரை மவுனமாக இருந்த பெரியவர் பேசத் தொடங்கினார். “”நீ எனக்காக கொண்டு வந்த பழத்தை கொடுக்காமல் நிற்கிறாயே!” என்றார். ஆச்சரியப்பட்டு போனார் மூதாட்டி. கைகால்கள் கூட நடுங்கத் தொடங்கின. பாட்டி கொடுத்த சீதாப்பழத்தை விருப்பத்துடன் வாங்கிக் கொண்டு அவருக்கு ஆசியளித்து பிரசாதம் வழங்கினார். மற்றொரு நிகழ்ச்சி ஒன்றையும் கேளுங்கள்.
சந்தானராமன் என்ற அரசுஅதிகாரி டில்லியில் மத்திய அரசுப்பணியில் இருந்தார். வசதி மிக்க அவர், ஒருமுறை பெரியவரைச் சந்திக்க வந்திருந்தார். தன்னைப் பெரியவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். மவுனமாக விஷயத்தைக் கேட்ட பெரியவர் சட்டென்று “” நீ நவநீதசோரன் தானே!” என்றார்.
சிறுவயதில் பெரியவர் “நவநீதசோரன்’ என்று சொன்னதை எண்ணி மகிழ்ந்தார். சந்தானராமன் செல்வந்தரின் ஒரே பிள்ளை. ஆனால் வீட்டில் சாப்பாட்டைத் தவிர வெளியில் எதுவும் சாப்பிட்டதில்லை. நண்பர்களைப் போல தானும் பலகார பட்சணங்களைச் சாப்பிட விரும்பிய சந்தானராமன், சிறுவனாக இருந்தபோது அப்பாவின் சட்டையில் இருந்த பணத்தை எடுத்திருக்கிறார். இப்படி நாள் தோறும் தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அப்பா, கையும் களவுமாக மகனைப் பிடித்து விட்டார். அத்துடன் மகனின் நடவடிக்கை குறித்து மிகுந்த வேதனையும் அடைந்தார்.
காஞ்சிமடத்திற்கு அழைத்து வந்து பெரியவரிடம் மகனைப் பற்றிச் சொல்லி வருந்தினார். பெரியவர் பலமாகச் சிரித்துவிட்டு, “”பகவான் கிருஷ்ணன் கூட சின்ன வயசிலே பால், தயிர், வெண்ணெய் திருடினான். அதுபோல சந்தானராமனும் “நவநீதசோரனாகி’ விட்டான். ஒன்று கவலைப்படாதீர்கள். நிச்சயம் இவன் பின்னாளில் நிதிநிறுவனங்களைக் கட்டிக் காப்பாற்றுவான். சிக்கனம் தேவைதான். இருந்தாலும் பிள்ளைகள் விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள். இனி இம்மாதிரியான தவறுகள் நடக்காது,” என்று ஆறுதல் சொல்லி ஆசி வழங்கினார். சந்தானராமனும் பெரியவரின் வாக்குப்போலவே, அரசுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். அந்நிகழ்ச்சியை மறக்காமல், தனது “புனைப்பெயரை’ மீண்டும் நினைவுபடுத்திய பெரியவரை எண்ணி, சந்தானராமன் மிகவும் பரவசப்பட்டார்.
காஞ்சிப்பெரியவர் புனே அருகில், ஒரு மலையடிவார கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு திருவெண்காட்டைச் சேர்ந்த ஜெயராமன் வந்தார். அவரிடம் பரிவுடன், “”இந்த சின்ன கிராமத்திற்கு கூட வந்திருக்கியே. பரம சந்தோஷம்! ஒவ்வொரு நாள் காலை பூஜையின்போது நீ தீட்சிதர் கீர்த்தனைகளைப் பாடு. நாங்கள் எல்லோரும் கேட்கவேண்டும்,” என்றார்.
ஜெயராமனுக்கு பூரிப்பு. ஒருநாள் வெள்ளிக் கிழமை பூஜை… பூஜை முடிந்ததும் சுக்கிரவார கீர்த்தனையைப் பாடத்தொடங்கினார் ஜெயராமன். அன்று யாருக்கும் பெரியவர் பிரசாதம் கொடுக்கவில்லை. ஜெயராமனுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து சென்னைக்கு கிளம்பிச் செல்ல உத்தரவிட்டார்.
பெரியவர் கண்டிப்பாக சொன்னதும் ஜெயராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பெரியவர் சொல்வதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் என்று மனதிற்கு தோன்றியது. மறுவார்த்தை பேசாமல் சென்னை சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்ததும் அவரது குருநாதர் மதுரை மணிஐயர் வீட்டிலிருந்து உடனே வரும்படி அழைப்பு வந்தது. குருநாதருக்கு ஏதோ அவசரம் என்பதை உணர்ந்த ஜெயராமன் அவரது வீட்டுக்குக்குச் சென்றார். இரண்டு நாட்கள் இரவும் பகலும் குருநாதர் அருகில் இருந்து சேவை செய்தார். மதுரை மணி ஐயர் இறைவனடி சேர்ந்தார். தன் குருநாதரின் இறுதிக்காலத்தில், அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அளிப் பதற்காகவே பெரியவர் தன்னை சென்னை அனுப்பினார் என்பதை அறிந்த ஜெயராமனின் உள்ளம் உருகியது.
இன்னொரு அற்புதத்தையும் பெரியவர் செய்தார்.
இன்னொரு அற்புதத்தையும் பெரியவர் செய்தார்.
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அவர் முகாமிட்டிருந்தார். சுவாமிகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். பெரியவர் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தில் தரையில் சில வெற்றிலைகள் கிடந்தன. அதைப் பார்த்த சுவாமிகள் சிஷ்யனை அழைத்து, அதனை எடுத்து வைக்கும் படி சொன்னார். தரையில் கிடக்கும் வெற்றிலையை ஏன் எடுக்கச் சொல்கிறார் என்ற குழம்பிய சிஷ்யர் வெற்றிலையை எடுத்து பத்திரப்படுத்தி வைத்தார். அந்த சமயத்தில், எப்படியாவது பெரியவரை தரிசித்து ஆசிர்வாதம் பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் முண்டியடித்து கூட்டத்தின் நடுவே கர்ப்பிணி பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். கூட்டநெரிசலில் சிக்கி முன்னேறிய அந்தப் பெண்ணுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அவளது நிலையைப் புரிந்துகொண்ட பெரியவர் சிஷ்யரை அழைத்து, அந்த வெற்றிலைகளை அந்தப் பெண்ணுக்கு கொடுக்கச் சொன்னார்.
அந்தப் பெண் வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டதும் அவளின் தலைசுற்றல் தீர்ந்து போனது. அப்பெண் வேறு யாருமல்ல. அமரர் ரசிகமணி டி.கே.சி. பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது பெயர் ஞானஒளி.
“”உடலை உறுத்தும் நோயை
உள்ளன்போடு போக்கும் தெய்வம்!
சாந்த சொரூபமான
சந்திரசேகரேந்திர சரஸ்வதியாக
அருள் தரும் தெய்வம்!
தாயாகி தந்தையுமாகி
எனை தாங்குகின்ற தெய்வம்!
துன்பம் துயர் போக்கும் நண்பனாகி
துணை நின்ற தெய்வம்!”
உள்ளன்போடு போக்கும் தெய்வம்!
சாந்த சொரூபமான
சந்திரசேகரேந்திர சரஸ்வதியாக
அருள் தரும் தெய்வம்!
தாயாகி தந்தையுமாகி
எனை தாங்குகின்ற தெய்வம்!
துன்பம் துயர் போக்கும் நண்பனாகி
துணை நின்ற தெய்வம்!”
என்று பெரியவர் மீது ஒரு அருமையான கவிதையும் பாடிச் சென்றார். எந்தப் பொருளையும் வீணாக்கக்கூடாது என்பதில் பெரியவர் கொண்டிருந்த அக்கறையை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது.
காஞ்சிப்பெரியவரிடம் பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மிகுந்த பக்தி உண்டு. சர்மா எப்போதும் பெரியவரை மனதில் சிந்தித்துக் கொண்டே இருப்பார். 1978, ஏப்ரல் 13, தமிழ்ப் புத்தாண்டு தினம். அன்று தேனாம்பாக்கத்திலுள்ள தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தேவராஜசர்மாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சட்டென்று கண்திறந்து பார்த்தார். அவருடைய முன்னிலையில் விபூதி, ருத்ராட்சம், கஷாயத்துடன் பெரியவரே காட்சி தந்தார். அதிர்ச்சியும் ஆனந்தமும் மனதில் நிறைய எழுந்து நின்ற தேவராஜசர்மாவுக்கு, “”என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருதேவா” என்று ரீதிகௌளை ராகத்தில் மும்பை சகோதரிகள் சரோஜாவும், லலிதாவும் பாடும் பாடல் தான் நினைவுக்கு வந்தது.
மறுநாள் காலையில் பொழுது விடியும் முன்பே குளித்து கோயிலுக்குச் செல்ல ஆயத்தமானார். அரிக்கேன் விளக்கொளியில் நான்கு மாடவீதியிலும் பாராயண கோஷ்டியுடன் வலம் வந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தார். காமாட்சி அம்மனைத் தரிசனம் செய்தார். அந்த ஆண்டு முழுவதும் தேவராஜசர்மாவிற்கு எடுத்த செயல்கள் அனைத்தும் நினைத்ததைவிடச் சிறப்பாகவே அமைந்தன. குருகடாட்சம் பெற்றால் வாழ்வில் கோடி நன்மை உண்டாகும் என்பதை சர்மா உணர்ந்தார். தேவராஜ சர்மாவிற்கு ஒருமுறை காதில் கடுமையான வலி ஏற்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர் ஆபரேஷன் செய்தால் ஒழிய வலி குறைய வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்.
காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்து அவரிடம் உத்தரவு பெற்றால் ஒழிய ஆபரேஷன் செய்து கொள்வதில்லை என்று தீர்மானம் எடுத்துக் கொண்டார் சர்மா. கையில் ஆரஞ்சுப்பழங்களை எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார். காதுவலி பற்றி பெரியவரிடம் சொல்லி வருத்தப்பட்டார். பெரியவர் பதிலேதும் சொல்லாமல், அவர் கொடுத்த பழங்களின் தோல்களை உரித்துக் கீழே போட்டார். சர்மா தன் மனதிற்குள், பெரியவர் தன் தீவினைகளையே உரித்து எடுத்துவிட்டதாக எண்ணிக் கொண்டார்.
அன்று முதல் காதுவலி குறைய ஆரம்பித்து விட்டது. மறுபடியும் காது பரிசோதிக்கும் டாக்டரிடம் சென்றார். டாக்டருக்கு அதிர்ச்சி. “”உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள். வேறு டாக்டரிடம் சென்று வைத்தியம் எடுத்துக் கொண்டீர்களா? ” என்று கேட்டார். சர்மா கண் கலங்கியபடியே,”"வேறு எந்த மருத்துவரிடமும் செல்லவில்லை. வைத்தியம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.
டாக்டர் சர்மாவிடம், “”பயப்படாமல் சொல்லுங்கள். நான் அந்த மருந்தைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போன்றவர்களுக்கு கொடுக்க வசதியாக இருக்கும்” என்று பரிவாக கேட்டார்.
“”டாக்டர்! நீங்கள் சொல்வது என்னவோ உண்மை தான். சில நாட்களுக்கு முன் ஒரு பெரிய வைத்தியரிடம் சென்றேன். அவர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். “அருட்பிரசாதம்’ என்னும் மருந்தைக் கொடுத்து என்னைக் குணப்படுத்திவிட்டார்” என்று சொல்லி மகிழ்ந்தார் சர்மா.
டாக்டரும் சர்மாவிடம்,”"இனி ஆபரேஷன் உங்களுக்குத் தேவைப்படாது. நீங்கள் தைரியமாக வீட்டுக்குச் செல்லலாம். காதுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது” என்று உறுதியளித்தார். தேவராஜசர்மாவும், பெரியவரின் கருணையை மனதிற்குள் வியந்தபடியே தன் வீட்டுக்கு கிளம்பினார்.
காஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள். இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார்.
எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு உண்டு. மடத்து சிப்பந்திகளையும் அரட்டி உருட்டி வேலை வாங்குவார். அதேநேரம், அன்பாகவும் நடந்து கொள்வார். அவருடைய அணுகுமுறையில் வேலை செய்யாதவனும் செய்யத் தொடங்கிவிடுவான்.
“ஏண்டா ராமமூர்த்தி! இன்னிக்கு பெரியவா பிøக்ஷயை சரியா பண்ணினாரா? ஏன் தான் ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் சேர்ந்தாப்பில வரதோ? தெரியலையே! தசமி வந்தாலே இப்படி நாலு நாள் பட்டினியா காயிறாரே! உடம்பு என்னாகும்?” என்று கவலை கொள்வார் பாட்டி.
“”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ!” என்பார்.
“”ஏண்டா! விஸ்வநாதா! பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று அதட்டுவார். இப்படி நாள் முழுவதும் எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று பெரியவரைத் தூக்கிச் செல்லும் சவாரிக்காரர்களிடம் போய், “”நீங்கள் எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதில் இருக்கும் பட்சணங்களை எடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரிப்பார்.
காலப்போக்கில், பாட்டி தள்ளாமையில் தவித்துவந்தார். அடிக்கடி பெரியவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வார். “”பொன்னோ பொருளோ தேவையில்லை. வாழ்க்கையில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்தேன். இப்போ நிம்மதியான முடிவை மட்டும் உங்களிடம் வேண்டறேன்,” என்று பாட்டி வருந்தினார்.
பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
ஒருநாள் பெரியவர் திடீரென்று தன் மடத்து தொண்டர் ஒருவரை அழைத்தார்.
“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.
“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.
சிறிது நேரத்தில் எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது ஆச்சரியமாக இருந்தது. மறைவுச் செய்தி கேட்ட பெரியவர் மூன்று தினங்கள் மவுனவிரதம் இருந்தார். பாட்டி கேட்டபடியே, நிம்மதியான இறுதி முடிவைத் தந்தது பெரியவரின் ஆசி என்பதை மடத்து தொண்டர்கள் அனைவரும் உணர்ந்தனர்.
No comments:
Post a Comment